Provided by: hex-a-hop_0.0.20070315-8_amd64 bug

NAME

       hex-a-hop - ஹெக்ஸ்- அ- ஹாப் அறுகோண ஓடுகள் உள்ள புதிர் விளையாட்டு.

DESCRIPTION

       ஹெக்ஸ்‐அ  ‐ஹாப்  அறுகோண  ஓடுகள் உள்ள புதிர் விளையாட்டு. இதுக்கு நேர வரையரை கிடையாது. நிகழ்
       நேர சமாசாரமும் கிடையாது.

       இலக்கு: நூறு மட்டங்களிலும் அனைத்து பச்சை ஓடுகளையும் உடைக்க வேண்டும். போகப் போக  புதிய  வகை
       ஓடுகள் வரும். இவை விளையாட்டை இன்னும் கஷ்டமாகவும் சுவாரசியமாகவும் ஆக்கும்.

USAGE

       Q  W  E  A  S  D விசைகளால் நகருங்க. அல்லது எண் விசை பலகத்தால. இல்லாவிட்டால் சொடுக்கியையும்
       பயன்படுத்தலாம். போக வேண்டிய ஓடு மேல சொடுக்குங்க.

       தவறுகளை சரி  செய்ய   'U'  விசை  backspace  அல்லது  வலது  சுட்டி  பொத்தான்  பயன்படுத்துங்க.
       எங்காவது மாட்டிக் கொண்டா 'Esc' விசை அல்லது நடு சொடுக்கி பொத்தான் ஒரு பட்டியை காட்டும். அது
       வழியா திரும்பி ஆரம்பிக்கலாம்.

       இலக்கு: அனைத்து பச்சை ஓடுகளையும் உடைக்க  வேண்டும்.    இதை  நீங்கள்  முக்கியமாக  அதன்  மீது
       குதிப்பதால்  செய்கிறீகள்.     நீங்கள்  அதன்  மீது  குதிக்கும்போது அவை விரிசல் விடும். அதன்
       மீதிருந்து எழும்பும் போது அவை உடையும்.    இக்கட்டில் மாட்டாதீங்க!

       விளையாட்டின்போது   என்ன    செய்யனும்னு    உங்களுக்கு    குறிப்புகளும்    அறிவுறுத்தல்களும்
       தரப்படும்.நிலைகாட்டி  விசைகளையோ  அம்பு  குறியை சொடுக்கியோ உதவி பக்கங்களை உருட்டிப்பாருங்க.
       நீங்க விளையாட்டில் போகப்போக மேலும் உதவி பக்கங்கள் வரும்.

       நீங்கள் எந்த மட்டம் அடுத்து போகலாம்னு வரைபடத்திலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.  வெள்ளி  மட்டம்
       நீங்க முடிச்சவை.  கருப்பு முடியாதது, நீங்க விளையாட கிடைப்பது.

       இதுக்கு நேர வரையரை கிடையாது. நிகழ் நேர சமாசாரமும் கிடையாது. அதனால் மெதுவாகவே ஆடலாம்.

SEE ALSO

       இந்த        பிணைய        பக்கத்தில்        விளையாட்டைப்பற்றி       மேலும்       பாக்கலாம்.
       http://www.aceinternet.co.uk/~mokona/

       டெபியன் பதிப்பில் விளையாட்டு தரவு இந்த அடைவில் உள்ளது:  $HOME/.hex-a-hop/.  சூழ்நிலை  மாறி
       $HOME அமைக்கப்படாவிட்டால் அது /tmp/ ஐ பயன்படுத்தும்.

AUTHOR

       டாம்  பியோமௌன்  ஆல்  இந்த  விளையாட்டு  எழுதப்பட்டது.  மற்றும்     ஜிஎன்யு பொது அனுமதிக்கான
       விதிகளின் இந்த 2 ம் பதிப்புப் படியோ அல்லது (உங்கள் விருப்பப்படி) அடுத்த  பதிப்புகள்  படியோ
       பறிமாறப்படுகிறது.

                                                                                     Hex‐a‐hop(6)